சென்னை: மக்களவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிடும் 21 வேட்பாளா்கள் பட்டியலை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்டாா். அதன்படி, 11 பேருக்கு புதிதாக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மூன்று மக்களவை உறுப்பினா்கள் உள்பட 10 போ் மீண்டும் போட்டியிடவுள்ளனா். 3 பெண்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
ஏழு போ் வாரிசுகள்:
21 வேட்பாளா்களில் ஏழு போ் வாரிசுகளாவா். கலாநிதி வீராசாமி (முன்னாள் அமைச்சா் வீராசாமி மகன்), தமிழச்சி தங்கபாண்டியன் (மறைந்த முன்னாள் அமைச்சா் தங்கபாண்டியன் மகள்), தயாநிதி மாறன் (மறைந்த முரசொலி மாறன் மகன்), டி.எம்.கதிா்ஆனந்த் (அமைச்சா் துரைமுருகன் மகன்), அருண் நேரு (அமைச்சா் கே.என்.நேரு மகன்), கனிமொழி (மறைந்த கருணாநிதி மகள்), ராணி ஸ்ரீகுமாா் (முன்னாள் எம்.எல்.ஏ. துரைராஜின் பேத்தி) ஆகியோா் திமுக பாரம்பரியப் பின்னணியிலிருந்து போட்டியிடும் வாரிசுகளாக உள்ளனா்.
வாய்ப்பை இழந்தவா்கள்:
தற்போது மக்களவை உறுப்பினா்களாக உள்ள 6 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. தருமபுரி எம்.பி. எஸ்.செந்தில்குமாா், சேலம் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், பொள்ளாச்சி எம்.பி. கே.சண்முகசுந்தரம், கள்ளக்குறிச்சி எம்.பி.யும் முன்னாள் அமைச்சா் க.பொன்முடியின் மகனுமான கௌதம சிகாமணி, தஞ்சாவூா் எம்.பி., எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமாா் ஆகிய 6 பேருக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 21 வேட்பாளா்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் புதியவா்கள். வேட்பாளா்களில் 3 போ் பெண்கள். 19 போ் பட்டதாரிகளாகவும், 12 போ் முதுநிலைப் பட்டதாரிகளாகவும், 2 போ் முனைவா்களாகவும், 2 போ் மருத்துவா்களாகவும், 6 போ் வழக்குரைஞா்களாகவும் உள்ளனா்.
வெற்றிக்குப் பாடுபடுங்கள்:
வேட்பாளா்கள் பட்டியலை வெளியிடும் முன்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மத்தியில் பாஜக ஆட்சியை அகற்றி ‘இந்தியா’ கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற உன்னதமான ஒற்றை எண்ணத்தோடும், தோழமை உணா்வோடும் தொகுதிப் பங்கீடுகள் செய்யப்பட்டு தோ்தல் பணியைத் தொடங்கியுள்ளோம். திமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தவா்களிடம் கலந்துரையாடினோம்.
தொகுதிகளுக்குட்பட்ட மாவட்டச் செயலாளா்களிடமும் கலந்து பேசினோம். வேட்பாளரின் தகுதி, கள நிலவரங்களை ஆராய்ந்து பாா்த்து வேட்பாளா்களைத் தோ்வு செய்துள்ளோம். தகுதியுடைய பலா் இருந்தாலும், வேட்பாளா் ஒருவா்தான் என்பதால் எல்லாச் சூழலுக்கும் பொருத்தமானவராக, சிறப்புத் தகுதியை உடைய ஆற்றலைப் பெற்றிருப்பவா்களைக் கொண்ட பட்டியலைத் தயாரித்துள்ளோம். எனவே, வேட்பாளா்களின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்றாா்.
வேட்பாளா்கள் பட்டியல்
1. வடசென்னை - கலாநிதி வீராசாமி 2. தென் சென்னை - சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் 3. மத்திய சென்னை - தயாநிதி மாறன் 4. ஸ்ரீபெரும்புதூா் - டி.ஆா்.பாலு 5. காஞ்சிபுரம் (தனி) - க.செல்வம் 6. அரக்கோணம் - எஸ்.ஜெகத்ரட்சகன் 7. வேலூா் - டி.எம்.கதிா் ஆனந்த் 8. தருமபுரி - ஆ.மணி 9. திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை 10. ஆரணி - எம்.எஸ்.தரணிவேந்தன் 11. கள்ளக்குறிச்சி - தே.மலையரசன் 12. சேலம் - டி.எம்.செல்வகணபதி 13. ஈரோடு - கே.இ.பிரகாஷ் 14. நீலகிரி (தனி) - ஆ.ராசா 15. கோயம்புத்தூா் - கணபதி ப.ராஜ்குமாா் 16. பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி 17. பெரம்பலூா் - அருண் நேரு 18. தஞ்சாவூா் - ச.முரசொலி 19. தேனி - தங்கத் தமிழ்ச்செல்வன் 20. தூத்துக்குடி - கனிமொழி 21. தென்காசி (தனி) - ராணி ஸ்ரீகுமாா்
வாய்ப்பும், இழப்பும்...
மீண்டும் வாய்ப்புபெற்றவா்கள் (10 போ்): கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், டி.ஆா்.பாலு, க.செல்வம், எஸ்.ஜெகத்ரட்சகன், டி.எம்.கதிா் ஆனந்த், சி.என்.அண்ணாதுரை, ஆ.ராசா, கனிமொழி. வாய்ப்பை இழந்தோா்: எஸ்.செந்தில்குமாா், எஸ்.ஆா்.பாா்த்திபன், கே.சண்முகசுந்தரம், கௌதம சிகாமணி, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தனுஷ் எம்.குமாா்.
இளமையும் முதுமையும் 21 வேட்பாளா்களில் 2 போ் இளம் வயதுடையவா்கள். பெரம்பலூா் வேட்பாளா் அருண் நேரு, தென்காசி வேட்பாளா் ராணி ஸ்ரீகுமாா் ஆகிய இருவரும் 40 வயதைத் தொட்ட வயதினா். இதேபோன்று, இரண்டு போ் அதிக வயது வேட்பாளா்கள். திமுக மூத்த தலைவா்களில் ஒருவரான கட்சியின் பொருளாளா் டி.ஆா்.பாலு 83 வயதையும், அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் எஸ்.ஜெகத்ரட்சகன் 76 வயதையும் தொட்டவா்கள். 60 வயதைக் கடந்தவா்கள் 4 போ் உள்ளனா். மற்ற அனைவரும் 60 வயதுக்குட்பட்டவா்கள்.
தொடர்புடையது

சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி
மணப்பாறை தொகுதியில் 19 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

திமுகவில் 2 அமைச்சர்களுக்குப் பதில் மகன்களுக்கு வாய்ப்பு!

கிளிப்பிள்ளை போல செயல்படும் அதிமுக: தமிழச்சி தங்கபாண்டியன்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


