திமுகவில் 2 அமைச்சர்களுக்குப் பதில் மகன்களுக்கு வாய்ப்பு!
திமுகவில் அமைச்சர்களுக்குப் பதில் மகன்கள் அளிககப்பட்ட வாய்ப்பு பற்றி..

பொன்முடி மகன், காந்தியின் மகன்
DPS

பொன்முடி மகன், காந்தியின் மகன்
DPS
தமிழகத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் வெளியானதைத் தொடர்ந்து, திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறுகிறது. திமுக, அதிமுக, நாதக மற்றும் தவெக ஆகிய கட்சிகளின் தலைமையில் நான்கு முனைப் போட்டிகள் நிலவுகின்றன.
அதன்படி, திமுக கூட்டணியில் போட்டியிடும் 164 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தமுறை 28 அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இரண்டு அமைச்சர்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக அவர்களது மகன்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் அமைச்சர் பொன்முடியும், அமைச்சர் காந்தியும் இந்த சமயம் போட்டியிடவில்லை.
பொன்முடிக்கு பதிலாக அவரது மகன் கௌதம சிகாமணி - திருக்கோவிலூர் தொகுதியிலும், காந்தியின் மகன் வினோத் காந்தி - ராணிப்பேட்டை தொகுதியிலும் களம் காண்கின்றனர்.
அதுமட்டுமின்றி, திமுகவில் சமீபத்தில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு போடிநாயக்கனூர் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...