கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!

பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் முழு விவரம் வெளியாகியிருக்கிறது.

MK Stalin

திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு - x - Image

Published On :

தமிழகத்தில் ஆளும் திமுக கட்சியின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுகவின் பொருளாளர் டி.ஆர். பாலு இன்று பிற்பகலில் அறிவித்தார்.

கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளையும், திமுக போட்டியிடும் தொகுதிகளையும் திமுகவின் பொருளாளர் டி.ஆர். பாலு அறிவித்த பிறகு, திமுக வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரங்கள் வெளியாகியுள்ளன.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில், பொன்னேரி (தனி), திருபெரும்புதூர் (தனி), சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, திருவைகுண்டம், நான்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை (தனி), துறையூர், கவுண்டம்பாளையம், ஆத்தூர் (தனி), பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர் உள்ளிட்ட 28 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில், 1 விருத்தாசலம், 2. விருதுநகர், 3. தருமபுரி, 4. குடியாத்தம் (தனி), 5. சேலம் மேற்கு, 6. போளூர், 7. பல்லாவரம், 8. திருத்தணி, 9. ஓமலூர், 10. மயிலம் ஆகிய தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில், 1. தளி, 2. திருத்துறைப்பூண்டி (தனி), 3. திருவில்லிபுத்தூர் (தனி), 4. திருப்பூர் வடக்கு, 5. பவானிசாகர் (தனி) ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1. கீழ்வேளூர் (தனி), 2. கந்தர்வக்கோட்டை (தனி), 3. பத்தநாபபுரம், 4. பழனி, 5. திருவொற்றியூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 8 தொகுதிகள்.. காட்டுமன்னார்கோவில் (தனி), செய்யூர் (தனி), திருப்போரூர், அரக்கோணம் (தனி), திண்டிவனம் (தனி), பெரியகுளம் (தனி), கள்ளக்குறிச்சி (தனி) மற்றும் பண்ரூட்டி ஆகிய தொகுதிகளில் விசிக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிமுகவுக்கு 4 தொகுதிகளாக மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி (தனி), ஆகியவையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு பாபநாசர், வாணியம்பாடி என இரண்டு தெகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது தவிர்த்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு திருச்செங்கோடு, பொள்ளாச்சி ஆகிய இரண்டு தொகுதிகளும் மனித நேய மக்கள் கட்சிக்கு நாகப்பட்டினம், மணப்பாறை என இரண்டு தொகுதிகளும் முக்குலத்தோர் புலிப்படைக்கு சிவகங்கையும், மனித நேய ஜனநாயக கட்சிக்கு சிதம்பரம் தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு நன்னிலம் தொகுதியும், தமிழர் தேசம் கட்சிக்கு நத்தம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

Summary

The full details of the constituencies where DMK alliance parties will contest in the assembly elections have been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.