தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் 11 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் பொதுச் செயலர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக கூட்டணியில் பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடும் நிலையில், அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளின் விவரங்களை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் வெளியிட்ட நிலையில், அந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் விவரங்கள் இன்று வெளியாகியிருக்கிறது.
11 தொகுதிகளில், பூவிருந்தமல்லி (தனி) - ஏழுமலை, மன்னார்குடி - எஸ் காமராஜ் , சைதாப்பேட்டை - செந்தமிழன், மடத்துக்குளம் முன்னாள் அமைச்சர் சண்முகவேலு, காரைக்குடி - தேர்போகி பாண்டி, திருப்பத்தூர் - ஞானசேகரன், திருச்சி மேற்கு - தொட்டியம் ராஜேசேகரன், ஒட்டப்பிடாரம் (தனி)- சுந்தர்ராஜன், பெரியகுளம் (தனி) - கதிர்காமு, நான்குநேரி - இசக்கிமுத்து, திருவையாறு - வேலுகார்த்திகேயன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அதிமுக-பாஜக இணைந்து உருவாக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
இந்த கூட்டணிக் கட்சிகளில் பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதிமுக - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை ஒரு சில வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று இறுதி செய்யப்பட்டு அடுத்தடுத்து கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகி வருகிறது.
மடத்துக்குளம் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் சி. சண்முகவேலு, முன்னாள் எம்எல்ஏ ஆவார். 2001ஆம் ஆண்டு மடத்துக்குளம் தொகுதியிலிருந்தும் 2006ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டை தொகுதியிலிருந்தும் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, கிராமப்புற தொழில்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டு, அமைச்சரவை மறுசீரமைப்பின்போது வெறும் ஐந்து மாதக் காலத்தில் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார்.
ஜி செந்தமிழன், 2011ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர். தொழில்நுட்பத் துறை, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக பதவி வகித்து, அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் அமைச்சரவை மாற்றத்தின்போது அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார்.
திமுக தலைமையிலான கூட்டணியில், இன்னமும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறியாகவே தொடர்கிறது.
Summary
The AMMK candidate list has been released, and former minister Shanmugavel has been given a chance.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை?

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏன்?

தமிழக சட்டமன்றத் தேர்தல்; அமமுக போட்டியிடும் இடங்கள்! | ADMK | AMMK | EPS

அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள்: இபிஎஸ் அறிவிப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


