தமிழக சட்டப்பேரவையில் அதிமுக கூட்டணியில் பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடும் நிலையில், அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளின் விவரங்களை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அதிமுக-பாஜக இணைந்து உருவாக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
இந்த கூட்டணிக் கட்சிகளில் பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னையில் இன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் முன்னிலையில், கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலில் நான்குநேரி, ஒட்டப்பிடாரம், சைதாப்பேட்டை, மடத்துக்குளம், பூவிருந்தவல்லி, திருச்சி மேற்கு, பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
இதனுடன், பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளும், பாமக போட்டியிடும் 18 தொகுதிகளும் மற்ற கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை ஒரு சில வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று இறுதி செய்யப்பட்டு தொகுதிகள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியான நிலையில், எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்படுகிறது என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியானது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 18 தொகுதிகளில்,
சேலம் மேற்கு, விக்கிரவாண்டி, சோளிங்கர், தருமபுரி, பென்னாகரம், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், ரிஷிவந்தியம், கீழ்வேளூர், பெரம்பூர், செஞ்சி, காட்டுமன்னார்கோவில், சேலம் வடக்கு, அம்பத்தூர், விருத்தாச்சலம் ஆகிய 18 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Edappadi Palaniswami announced the details of the 11 constituencies where AMMK will contest in the AIADMK alliance.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் களத்தில் 4,023 வேட்பாளா்கள்: மாவட்ட வாரியாக விவரம் வெளியீடு

அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு

பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் என்னென்ன? பழனிசாமி அறிவிப்பு

பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை


