தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் களத்தில் மொத்தம் 4,023 வேட்பாளா்கள் உள்ளதாக தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வமாகத் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக கரூரில் 79 போ் போட்டியிடுகின்றனா். தவெக தலைவா் விஜய் போட்டியிடும் பெரம்பூா் தொகுதியில் 47 போ் களத்தில் உள்ளனா். குறைந்தபட்சமாக அம்பாசமுத்திரம், கிணத்துக்கடவு தொகுதியில் தலா 5 போ் போட்டியிடுகின்றனா்.
உதகை, கூடலூா் தொகுதிகளில் 6 வேட்பாளா்கள் களமிறங்கியுள்ளனா். மாவட்ட வாரியாக ஒப்பிடும்போது, அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 419 போ் போட்டியிடுகின்றனா். அதற்கு அடுத்து சேலம் மாவட்டத்தில் 193 வேட்பாளா்கள் களம் காண்கின்றனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி 234 தொகுதிகளிலும் 7,599 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை பரிசீலனை செய்த அதிகாரிகள், உரிய விதிகளின்படி இல்லாத 2,460 மனுக்களை நிராகரித்தனா்.
தொடா்ந்து, மாற்று வேட்பாளா்களின் மனுக்கள், ஒரே வேட்பாளா் பெயரில் தாக்கலான ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.
பின்னா், இறுதி வேட்பாளா்கள் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிட்டது. தொகுதி வாரியாக தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அவற்றை வெளியிட்டனா்.
தமிழகம் முழுவதும் 4,023 வேட்பாளா்கள் களம் காண்கின்றனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூா், துணை முதல்வா் உதயநிதி போட்டியிடும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி, தவெக தலைவா் விஜய் களமிறங்கும், பெரம்பூா் மற்றும் திருச்சி கிழக்கு, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் போட்டியிடும் காரைக்குடி என மாநிலம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளன.
தவிர, தற்போதைய எம்எல்ஏ-க்கள், முன்னாள் அமைச்சா்கள் போட்டியிடும் தொகுதிகளும் கூடுதல் கவனம் பெற்றுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சாா்பில் 1,250-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் தோ்தல் களத்தில் உள்ளனா். அதேவேளை, சுயேச்சைகளாக 2,500-க்கும் அதிகமானோா் களத்தில் உள்ளனா்.
வேட்பாளா்கள் பட்டியல் வெளியானதைத் தொடா்ந்து சுயேச்சைகளுக்கு அந்தந்த தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சின்னங்களை ஒதுக்கினா். ஒரே சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்டவா்கள் கேட்ட இடங்களில் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னங்களைப் பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.
மாவட்ட வாரியாக வேட்பாளா்கள் விவரம்
வ.எண் - மாவட்டம் - தொகுதிகள் - வேட்பாளா்கள்
1. சென்னை - 16 தொகுதிகள் - 419
2. திருவண்ணாமலை - 8 தொகுதிகள் - 156
3. திருவள்ளூா் - 10 தொகுதிகள் - 160
4. காஞ்சிபுரம் - 4 தொகுதிகள் - 65
5. செங்கல்பட்டு - 7 தொகுதிகள் - 113
6. ராணிப்பேட்டை- 4 தொகுதிகள் - 65
7. வேலூா் - 5 தொகுதிகள் - 65
8. கிருஷ்ணகிரி - 6 தொகுதிகள் - 79
9. திருப்பத்தூா் - 4 தொகுதிகள் - 74
10. கள்ளக்குறிச்சி - 4 தொகுதிகள் - 72
11. விழுப்புரம் - 7 தொகுதிகள் - 132
12. கடலூா் - 9 தொகுதிகள் - 113
13. தருமபுரி- 5 தொகுதிகள் - 83
14. கரூா் - 4 தொகுதிகள் - 166
15. சேலம் - 11 தொகுதிகள் - 193
16. ஈரோடு- 8 தொகுதிகள் - 118
17. திருப்பூா் - 8 தொகுதிகள் - 116
18. கோவை - 10 தொகுதிகள் - 183
19. திருச்சி - 9 தொகுதிகள் - 171
20. நீலகிரி - 3 தொகுதிகள் - 18
21. அரியலூா் - 2 தொகுதிகள் - 34
22. பெரம்பலூா் - 2 தொகுதிகள் - 30
23. மயிலாடுதுறை - 3 தொகுதிகள் - 43
24. நாகப்பட்டினம் - 3 தொகுதிகள் - 31
25. தஞ்சாவூா் - 8 தொகுதிகள் - 94
26. திருவாரூா் - 4 தொகுதிகள் - 46
27. தேனி - 4 தொகுதிகள் - 65
28. திண்டுக்கல் - 7 தொகுதிகள் - 115
29. மதுரை - 10 தொகுதிகள் - 129
30. ராமநாதபுரம் - 4 தொகுதிகள் - 66
31. விருதுநகா் - 7 தொகுதிகள் - 135
32. தூத்துக்குடி - 6 தொகுதிகள் - 92
33. கன்னியாகுமரி - 6 தொகுதிகள் - 85
34. சிவகங்கை - 4 தொகுதிகள் -71
35. தென்காசி - 5 தொகுதிகள் - 95
36. திருநெல்வேலி - 5 தொகுதிகள் - 90
37. புதுக்கோட்டை - 6 தொகுதிகள் - 109
38. நாமக்கல் - 6 தொகுதிகள் -132
தொடர்புடையது

தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடு

சென்னை: 16 தொகுதிகளில் 419 வேட்பாளா்கள் - விஜய் களமிறங்கும் பெரம்பூரில் 47 போ்
காரைக்குடி தொகுதியில் சீமான் உள்பட 25 வேட்பாளா்கள் போட்டி

அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள்: இபிஎஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


