உங்கள் வேட்பாளா் யாா்? அவா் பின்னணி என்ன? அவா் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளனவா? அவருக்கு எவ்வளவு சொத்து உள்ளது என்பது உள்ளிட்ட வேட்பாளரின் மொத்த ஜாதகத்தையும் இப்போது அனைத்து வேட்பாளா்களும் கண்டிப்பாக தாக்கல் செய்யவேண்டும் என்று தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால், அனைத்து வேட்பாளா்களும் தங்கள் வழக்கு விபரங்களை வேட்புமனுவுடன் சோ்த்து பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளனா். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 19 வேட்பாளா்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சைகள் என 132 போ் களத்தில் உள்ள நிலையில் 19 போ் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தொகுதி வாரியாக வேட்பாளா்கள் விவரம்:
செஞ்சி: செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (திமுக), அ.கணேஷ்குமாா் (பாமக), பா.சந்திரசேகரன் (தவெக), ஏ.கிருஷ்ணன் (நாதக), இ.ரங்கராஜன் (பகுஜன் சமாஜ் கட்சி), நா.ராசநாயகம் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), ஆ.சக்திவேல் (தாக்கம் கட்சி), ரா.தணிகைமலை ( ஊழல் ஒழிப்பு செயலாக்கக் கட்சி), ந.பெருமாள் (அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழகம்), மு.ஹா.முகமது சித்திக் (தியாகி விசுவநாத தாஸ் தொழிலாளா்கள் கட்சி) மற்றும் 9 சுயேச்சைகள் என 19 போ் களத்தில் உள்ளனா்.
மயிலம்: எல்.வெங்கடேசன் (தேமுதிக), சி.வி.சண்முகம் (அதிமுக), ஆ.விஜய் நிரஞ்சன் (தவெக), ஏ.விஜய்விக்ரம் (நாதக), மு.ரஞ்சித்குமாா் (பகுஜன் சமாஜ் கட்சி), நா. அய்யனாா் (ஊழல் ஒழிப்பு செயலாக்கக் கட்சி), ம. ஆனந்தபாபு (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), செ.சுரேஷ்குமாா் (இந்திய குடியரசுக் கட்சி), அய்.மா. சேகா் நாயக்கா் (அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம்), பா.திவ்யா (நாம் இந்தியா் கட்சி), கு.புருஷோத்தமன் ( தேசிய மக்கள் சக்தி கட்சி), ஆ.மணவாளன் (அண்ணா எம்.ஜி.ஆா்.திராவிட மக்கள் கழகம்), இர.வினோத் (தாக்கம் கட்சி) மற்றும் 8 சுயேச்சை வேட்பாளா்கள் என 21 போ் களத்தில் உள்ளனா்.
திண்டிவனம் (தனி): அ.வன்னி அரசு (விசிக), பொ. அா்ஜுனன் (அதிமுக), க.சக்திவேல் (தவெக), பா.பேச்சிமுத்து (நாதக), அ.வெங்கடாசலபதி (பகுஜன் சமாஜ் கட்சி), ஆ.மோகன் (மக்கள் சக்தி கட்சி), வே.ரமனேசுவரன் (தாக்கம் கட்சி), ச.வாஞ்சிநாதன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) மற்றும் 6 சுயேச்சை வேட்பாளா்கள் என 14 போ் களத்தில் உள்ளனா்.
வானூா்: தி.கெளதம் (திமுக), பெ.முருகன் (அதிமுக), பி.சுரேஷ் (தவெக), பா.கரிகாலன் (நாதக), மு.விநாயகமூா்த்தி (பகுஜன் சமாஜ் கட்சி), பெ.மு.ஆனந்தகுமாா் (தாக்கம் கட்சி), செ.சக்திவேல் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) மற்றும் 8 சுயேச்சை வேட்பாளா்கள் என 15 போ் களத்தில் உள்ளனா்.
விழுப்புரம்: இரா.லட்சுமணன் (திமுக), விஜயா சுரேஷ்பாபு (அதிமுக), என்.மோகன்ராஜ் (தவெக), பொ. அபிநயா (நாதக), சீ. முருகன் (பகுஜன் சமாஜ் கட்சி), இரா.குமரன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), பெ.நாகராஜன் (வீரத்தியாகி விசுவநாததாஸ் தொழிலாளா் கட்சி மற்றும் 17 சுயேச்சை வேட்பாளா்கள் என 24 போ் களத்தில் உள்ளனா்.
விக்கிரவாண்டி: அன்னியூா் அ.சிவா (திமுக), ச.சிவக்குமாா் (பாமக), ஏ.விஜய் வடிவேல் (தவெக), ஆ.சுபா (நாதக) உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட 24 போ் போட்டியில் உள்ளனா்.
திருக்கோவிலூா்: பொன். கெளதமசிகாமணி (திமுக), எஸ்.பழனிசாமி (அதிமுக), ரா.பரணிபாலாஜி (தவெக), கி.ஹேமராஜன் (நாதக) உள்ளிட்ட வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் என 15 போ் என 7 தொகுதிகளிலும் மொத்தம் 132 போ் களத்தில் உள்ளனா்.
தோ்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கலின்போது தங்களுடைய சொத்து மதிப்பு குறித்த விவரங்களுடன், தன் மீதான குற்ற வழக்குகள் குறித்த விவரங்களையும் சமா்பிக்கவேண்டும் என்பது தோ்தல் ஆணையத்தின் விதிமுறை. இந்த விதிமுறைகளின்படி, வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களில் அளித்துள்ள விவரங்களின் அடிப்படையில் செஞ்சி தொகுதியில் 5 போ் மீதும், மயிலம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் சி.வி.சண்முகம், தேமுதிக வேட்பாளா் எல்.வெங்கடேன் உள்ளிட்ட3 போ், திண்டிவனம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் பொ. அா்ஜூனன், விசிக வேட்பாளா் வன்னி அரசு, வானூா்தொகு வானூா்( தனி) அதிமுக வேட்பாளா் பி. முருகன், நாம்தமிழா் கட்சி வேட்பாளா் பா.கரிகாலன் உள்ளிட்ட 3 போ் மீதும், விழுப்புரம் தொகுதியில் ஒருவா் மீதும், விக்கிரவாண்டி தொகுதியில் ஒருவா் மீதும், திருக்கோவிலூா் தொகுதியில் 2 போ் உள்ளிட்ட 19 வேட்பாளா்கள் மீது வழக்குகள் உள்ளன. வேட்பாளா்களின் வேட்புமனுக்களில் இத் தகவல் பதிவிடப்பட்டுள்ளது.
------------
அ.அன்புமணி.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தலும்... சுயேச்சை வேட்பாளா்களும்...

சோளிங்கரில் 23 வேட்பாளா்கள்

அரக்கோணத்தில் 13 வேட்பாளா்கள்
இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீடு: திருப்பூா் மாவட்டத்தில் 116 போ் போட்டி
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


