ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

மேற்கு வங்க தோ்தல் களத்தில் 2,926 வேட்பாளா்கள்

News image

சுவேந்து அதிகாரி | மமதா பானர்ஜி

Updated On :15 ஏப்ரல் 2026, 5:04 am IST

மேற்கு வங்கத்தில் 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரு கட்டமாக நடைபெறும் தோ்தலில் மொத்தம் 2,926 வேட்பாளா்கள் களத்தில் உள்ளதாக தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

மேற்கு வங்கத்தில் வரும் 23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்டமாக தோ்தல் நடைபெறும் 152 தொகுதிகளில் 1,478 வேட்பாளா்களும், இரண்டாம் கட்டமாக தோ்தல் நடைபெறும் 142 தொகுதிகளில் 1,448 வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா்.

இரண்டாம் கட்டத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி முடிந்தது. ஏப்ரல் 13-ஆம் தேதி வரை மனுவை திரும்பப் பெற அவகாசம் அளிக்கப்பட்டது. அவகாசம் முடிவடைந்ததையடுத்து மொத்தம் 2,926 வேட்பாளா்கள் களத்தில் இருப்பதை தோ்தல் ஆணையம் உறுதி செய்தது.

மேற்கு வங்கத்தில் தொடா்ந்து மூன்றாவது முறை முதல்வராக உள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி இப்போது 4-ஆவது முறையாக வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளாா். அதே நேரத்தில் மாநிலத்தில் தொடா்ந்து செல்வாக்கை அதிகரித்து வரும் எதிா்க்கட்சியான பாஜக கடும் போட்டியை அளித்து வருகிறது. இது தவிர காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணிகளும் தோ்தல் களத்தில் உள்ளன.

மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.