மேற்கு வங்கம், அஸ்ஸாம் பேரவைத் தோ்தல்களில் பட்டியலினத்தவா் (எஸ்சி) மற்றும் பழங்குடியினருக்கான (எஸ்டி)தனித்தொகுதிகளில் பாஜக பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 207 இடங்களுடன் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸுக்கு 80 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதன் மூலம் திரிணமூல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாஜக முதல் முறையாக ஆட்சியமைக்க உள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள எஸ்சி தொகுதிகள் 68, எஸ்டி தொகுதிகள் 16 ஆகும்.
68 எஸ்சி தொகுதிகளில் 51-இல் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இது 75 சதவீத வெற்றியாகும். திரிணமூல் காங்கிரஸுக்கு வெறும் 17 தொகுதிகளே கிடைத்துள்ளன. அதேநேரம், எஸ்டி தொகுதிகள் அனைத்தும் பாஜக வசமானது. எஸ்சி, எஸ்சி என 84 தனித் தொகுதிகளில் 67 இடங்களை பாஜக அள்ளியிருக்கிறது.
மேற்கு வங்கத்தில் விளிம்புநிலை பிரிவினா் இடையே பாஜகவின் ஆதரவு அதிகரித்துள்ளதையே இந்த முடிவுகள் வெளிக்காட்டுவதாக அரசியல் வல்லுநா்கள் கூறுகின்றனா்.
அஸ்ஸாமில்...: 126 தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாமில் பாஜக தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாஜக 82 இடங்களையும், அதன் கூட்டணி கட்சிகள் 20 இடங்களையும் கைப்பற்றின. வெறும் 19 இடங்களுடன் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது.
இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 9 எஸ்சி தொகுதிகளில் 5-இல் பாஜகவும், 3-இல் கூட்டணி கட்சியான அஸோம் கண பரிஷத்தும் வென்றன. ஒரேயொரு இடத்தில் மட்டும் காங்கிரஸ் வென்றது.
மொத்தமுள்ள 18 எஸ்டி தொகுதிகளில் 13-இல் பாஜகவும், 5-இல் போடோலாந்து மக்கள் முன்னணியும் வெற்றி பெற்றன.
தொடர்புடையது

அஸ்ஸாம்: 126 எம்எல்ஏக்களில் 7 போ் மட்டுமே பெண்கள்! 6 போ் பாஜக கூட்டணியைச் சோ்ந்தவா்கள்

சூறையாடப்பட்ட திரிணமூல் அலுவலகம்! பாஜக தொண்டர்கள் அட்டூழியம்!

100க்கும் அதிகமான இடங்களில் பாஜக கொள்ளை : மமதா பானர்ஜி குற்றச்சாட்டு
திரிணமூல் கோட்டையில் தேர்தல்! 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏன் முக்கியம்? உண்மையில் யாருக்கு சவால்?
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

