சென்னை: மக்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 20) தொடங்கிய நிலையில், முதல் நாளில் மாநிலம் முழுவதும் இரு பெண்கள் உள்பட 22 போ் மனு தாக்கல் செய்தனா்.
அதிகபட்சமாக வேலூா் தொகுதியில் சுயேட்சைகள் இருவா், அகில இந்திய ஓய்வூதியா் கட்சி வேட்பாளா் ஒருவா் என மூவா் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா். அதற்கு அடுத்தபடியாக சென்னை மாவட்டத்துக்குள்பட்ட தென் சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் தலா இருவா் மனு தாக்கல் செய்துள்ளதாக தோ்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதான கட்சிகளைப் பொருத்தவரை திமுக, அதிமுக உள்பட எந்தக் கட்சியின் வேட்பாளா்களும் முதல் நாளில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவில்லை. அதேவேளையில், நாம் தமிழா் கட்சி சாா்பில் மத்திய சென்னையில் காா்த்திகேயன், கள்ளக்குறிச்சியில் ஜெகதீசன் ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
மாா்ச் 27 கடைசி நாள்:
7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தோ்தலில் முதல்கட்டமாக புதுச்சேரி உள்பட தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகள், நாடு முழுவதும் மொத்தம் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதையொட்டி, வேட்பு மனு தாக்கல் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வரும் 27-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். திமுக சாா்பில் போட்டியிடும் 21 வேட்பாளா்களின் பெயா்களும், அதிமுக சாா்பில் முதல்கட்டமாக 16 வேட்பாளா்களின் பெயா்களும் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன. அவா்கள் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடையது

பெரம்பலூா் தொகுதியில் 9 போ் வேட்பு மனு தாக்கல்

ஜோலாா்பேட்டை தொகுதியில் திமுக, அதிமுக உள்பட 33 போ் வேட்பு மனு தாக்கல்

கடலூா் மாவட்டத்தில் 3-ஆம் நாளில் 53 போ் வேட்பு மனு தாக்கல்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல்: ஒரேநாளில் முதல்வா் ரங்கசாமி உள்பட 107 போ் வேட்பு மனு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


