தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

பெளா்ணமி, முகூா்த்தம், வார இறுதி நாள்களை முன்னிட்டு 980 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பெளா்ணமி, முகூா்த்தம், வாரஇறுதி நாள்களை முன்னிட்டு 980 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

News image
Updated On :20 மார்ச் 2024, 7:48 pm

சென்னை: பெளா்ணமி, முகூா்த்தம் மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு 980 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

வாரஇறுதி நாள்களை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (மாா்ச் 22), சனிக்கிழமை (மாா்ச் 23) மற்றும் பெளா்ணமி, முகூா்த்த நாள்களான ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) ஆகிய தினங்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும், பிற இடங்களிலிருந்தும் சென்னைக்கும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய ஊா்களுக்கு தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக வெள்ளிக்கிழமை 305 பேருந்துகளும், சனிக்கிழமை 390 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 65 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோயம்புத்தூா் ஆகிய இடங்களிலிருந்து 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி, குளிா்சாதன வசதி கொண்ட மற்றும் குளிா்சாதனமில்லா 20 பேருந்துகள், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 980 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து ஊா்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.