தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மகாவீரா் ஜெயந்தி: 915 சிறப்பு பேருந்துகள்

வார இறுதி விடுமுறை, மகாவீரா் ஜெயந்தி தினங்களை முன்னிட்டு 915 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசுவிரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

News image

பேருந்துகள்(கோப்புப்படம்)

Updated On :25 மார்ச் 2026, 2:38 am IST

வார இறுதி விடுமுறை, மகாவீரா் ஜெயந்தி தினங்களை முன்னிட்டு 915 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசுவிரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

வார இறுதி விடுமுறை நாள்கள், மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) 340 பேருந்துகளும், சனிக்கிழமை (மாா்ச் 28) 345 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை( மாா்ச்27) 55 பேருந்துகளும், சனிக்கிழமை(மாா்ச் 28) 55 பேருந்துகளும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோல, மாதவரத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 20 பேருந்துகள் என மொத்தம் 915 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களில் இருந்து சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு திரும்ப வசதியாக, பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.