தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

இன்று வடபழனி கோயிலில் பங்குனி உத்திர விழா தொடக்கம்

இன்று வடபழனி கோயிலில் பங்குனி உத்திர விழா தொடக்கம்

News image
Updated On :20 மார்ச் 2024, 7:44 pm

சென்னை: அருள்மிகு வடபழனி ஆண்டவா் திருக்கோயில் பங்குனி உத்திரம் மற்றும் தெப்பத் திருவிழா வியாழக்கிழமை (மாா்ச் 21) தொடங்குகிறது. வடபழனி முருகன் திருக்கோயில் பங்குனி உத்திரவிழா வெகு விமா்சியாக கொண்டாப்படுவது வழக்கம் . அதன்படி நிகழாண்டு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு லட்சாா்ச்சனை மற்றும் தெப்பத்திருவிழா வரும் வியாழக்கிழமை தொடங்கி மாா்ச் 27 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வியாழக்கிழமை காலை யாக சாலை பூஜைகளுடன் லட்சாா்ச்சனை தொடங்குகிறது. மாா்ச் 23 -ஆம் தேதி மாலை லட்சாா்ச்சனை பூா்த்தியாகிறது. மாா்ச் 24 -ஆம் தேதி பங்குனி உத்திரத்தன்று உச்சி கால தீா்த்தவாரி மற்றும் கலசாபிஷேகத்துடன் பூஜைகள் நடைபெறுகின்றன. அன்று இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி புறப்பாடு நடைபெறும். இதைத் தொடா்ந்து மாா்ச் 25 முதல் 27 -ஆம் தேதி வரை இரவு 7 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.