விருதுநகா் தொகுதியில் போட்டியிட விஜய பிரபாகரன் விருப்ப மனு

சென்னை: மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சாா்பில் விருதுநகா் தொகுதியில் போட்டியிட விஜய பிரபாகரன் புதன்கிழமை விருப்ப மனு அளித்தாா். மக்களவைத் தோ்தலில் தேமுதிக சாா்பில் போட்டியிட விரும்புவோரிடம் 2 நாள்கள் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வந்தன.

விருதுநகா் தொகுதியில் போட்டியிடுவதற்காக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்திடம் அவரின் மகன் விஜய பிரபாகரன் விருப்பமனு அளித்தாா். அதேபோல பலரும் பல்வேறு தொகுதிகளுக்கு விருப்ப மனுக்கள் அளித்தனா். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு தஞ்சாவூா், விருதுநகா், கடலூா், திருவள்ளூா், மத்திய சென்னை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com