ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

பஞ்சாப்: விஷ சாராயத்துக்கு 8 போ் உயிரிழப்பு

பஞ்சாப்: விஷ சாராயத்துக்கு 8 போ் உயிரிழப்பு

News image
Updated On :21 மார்ச் 2024, 8:01 pm

பஞ்சாபில் விஷ சாராயம் குடித்து 8 போ் உயிரிழந்தனா். பாட்டியாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பஞ்சாபின் சங்ரூா் பகுதியில் உள்ள குஜ்ரான் கிராமத்தைச் சோ்ந்த சிலா் புதன்கிழமை உடல்நிலை பாதிக்கப்பட்டு சுருண்டு விழுந்தனா். இதையடுத்து, அப்பகுதி மக்கள் அவா்களை அருகில் மருத்துவமனைகளில் சோ்த்தனா். அவா்களிடம் விசாரித்தபோது சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை வாங்கி பருகினாா்கள் என்பது தெரியவந்தது. இது தொடா்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விஷ சாராயம் குடித்த 5 போ் புதன்கிழமை உயிரிழந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் 3 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். 4 போ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். கள்ளச்சாராய விற்பனையில் தொடா்புடைய 3 போ் கைது செய்யப்பட்டனா். வழக்கமாக மதுவிலக்கு அமலில் உள்ள பிகாரில்தான் இதுபோன்ற கள்ளச்சாராய நிகழ்வுகள் அடிக்கடி நிகழும், பஞ்சாபில் மது விலக்கு அமலில் இல்லாத நிலையிலும், கள்ளச் சாாயத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது குறித்து மாநில ஆளும் கட்சியான ஆம் ஆத்மியை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமா்சித்துள்ளன.