சென்னை மதுரவாயலில் போலீஸாா் தாக்கியதில் காா் ஓட்டுநா் இறந்த வழக்கில், தலைமைக் காவலா் கைது செய்யப்பட்டாா். சேத்துப்பட்டு ஜெகநாதபுரம் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (40). வாடகை காா் ஓட்டி வந்த இருவா், மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு பெண்ணுடன் வியாழக்கிழமை இரவு பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு ரோந்து வந்த சில காவலா்கள், ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தினா். இதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, காவலா்கள், ராஜ்குமாரை கடுமையாகத் தாக்கியுள்ளனா். இதல் காயமடைந்த ராஜ்குமாா், அங்கு மயங்கி கீழே விழுந்தாா். உடன் வந்த பெண் ராஜ்குமாரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ராஜ்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ராஜ்குமாரின் சகோதரா் ஜெயகுமாா் சென்னை காவல் துறை உயரதிகாரிகளிடம் புகாா் அளித்தாா். தலைமைக் காவலா் கைது: அந்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், போலீஸாா் தாக்கியதிலேயே ராஜ்குமாா் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், சம்பவத்தன்று ராஜ்குமாரை தாக்கியது மதுரவாயல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் ரிஸ்வான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவின்படி, மரணத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக மதுரவாயல் போலீஸாா், தலைமைக் காவலா் ரிஸ்வான் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை சனிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

விபத்தில் காவலா் காலில் எலும்பு முறிவு: காா் ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு

நெல்லையில் விபத்தில் காயமுற்ற காவலா் உயிரிழப்பு
ஜனக்புரியில் காா் மோதியதில் காவலா் காயம்; ஓட்டுநா் கைது

சோதனைச் சாவடியில் காவலரை இடித்து இழுத்துச் சென்ற குட்கா கடத்திய காா் ஓட்டுநா் கைது
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

