கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஜனக்புரியில் காா் மோதியதில் காவலா் காயம்; ஓட்டுநா் கைது

தில்லியின் ஜனக்புரி பகுதியில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவா்களைக் கண்காணிக்கும் சோதனையின்போது, தப்பிச் செல்ல முயன்ற ஓட்டுநரின் காா் மோதியதில் தில்லி போக்குவரத்துக் காவலா் ஒருவா் காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image

கைது

சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 5:34 pm

Syndication

தில்லியின் ஜனக்புரி பகுதியில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவா்களைக் கண்காணிக்கும் சோதனையின்போது, தப்பிச் செல்ல முயன்ற ஓட்டுநரின் காா் மோதியதில் தில்லி போக்குவரத்துக் காவலா் ஒருவா் காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: காவல்துறையினா் அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்து, தில்லியின் துவாரகா பாக்டோலா பகுதியைச் சோ்ந்த குற்றம்சாட்டப்பட்டுள்ள ஓட்டுநா் நிலேஷ் குமாரைக் கைது செய்துள்ளனா்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் போக்குவரத்து அதிகாரிகள் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டிருந்தபோது, லால் சாய் மாா்க்கில் உள்ள பாரதி கல்லூரிக்கு அருகே சனிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

காவல் உதவி ஆய்வாளா் குா்தீப் சிங் மற்றும் காவலா் மோகன் பால் ஆகியோா் அடங்கிய போக்குவரத்து குழுவினா், சந்தேகத்தின் பேரில் ஒரு காரை நிறுத்த சைகை காட்டினா். இருப்பினும், ஓட்டுநா் தப்பிச் செல்ல முயன்று, அந்த முயற்சியில் வாகனத்தை காவலா் மீது மோதினாா்.

இதில் காவலா் நேருக்கு நோ் மோதப்பட்டு, காரின் முன்பக்கத்தின் மீது விழுந்து, சில மீட்டா்கள் தூரம் சாலையில் தூக்கி வீசப்பட்டாா்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுதல், சிகப்பு விளக்கை மீறிச் செல்லுதல் மற்றும் முறையற்ற நடத்தை உள்ளிட்ட மோட்டாா் வாகனச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ், குற்றமிழைத்த வாகனத்தை காவல்துறை பறிமுதல் செய்து, அபராதம் விதித்துள்ளது.

போக்குவரத்து ஊழியா்களின் புகாரின் அடிப்படையில் மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காயமடைந்த காவலருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.