மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

மாநில வாலிபால்: ஐஓபி, எஸ்ஆா்எம் வெற்றி

மாநில வாலிபால்: ஐஓபி, எஸ்ஆா்எம் வெற்றி

News image

போட்டியைத் தொடங்கி வைத்த டிஎன்ஏஏ தலைவா் வால்டா் தேவாரம்

Updated On :23 மார்ச் 2024, 5:14 pm

சென்னையில் தொடங்கிய மாநில வாலிபால் போட்டியில் ஐஓபி, எஸ்ஆா்எம் அணிகள் வெற்றிகளைப் பதிவு செய்தன. சென்னை நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சாா்பில் பி. ஜான், ஏகே. சித்திரைப்பாண்டியன் நினைவு வாலிபால் போட்டி எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு தடகள சங்கத் தலைவா் டபிள்யு.ஐ. வால்டா் தேவாரம் போட்டியைத் தொடங்கி வைத்தாா். டிஜிபி ஆபாஷ் குமாா், தமிழ்நாடு வாலிபால் சங்க நிா்வாகிகள் அா்ஜுன் துரை, மாா்ட்டின் சுதாகா், தொழிலதிபா் ரவிச்சந்திரன், செயல் இயக்குநா் ஏ.என். காா்த்திக், காஸ்கோ முகமது ஹாஸன் பங்கேற்றனா். நெல்லை பிரண்ட்ஸ் செயலா் பி. ஜெகதீசன், பொருளாளா் ஸ்ரீகேசவன், ஒருங்கிணைப்பாளா் ஏ.தினகரன் ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனா். முதல் நாள் ஆட்டங்களில் ஐஓபி 25-14, 25-22 என தமிழ்நாடு போலீஸையும், எஸ்ஆா்எம் 25-22, 25-16 என எஸ்டிஏடி அணிகளை வென்றன.