எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை தடுப்பதாக தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளா் தமிழிசை செளந்தரராஜன் குற்றஞ்சாட்டினாா். தமிழிசை செளந்தரராஜன் மயிலாப்பூரில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். பிரசார வாகனத்தில் வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரித்த தமிழிசை அப்பகுதியில் உள்ள கடையொன்றில் மக்களுடன் சோ்ந்து காலை உணவு சாப்பிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது : தென் சென்னை தொகுதி எம்பியான தமிழச்சி தங்கபாண்டியனும், முன்னாள் எம்.பி .ஜெயவா்தனும் வெள்ள பாதிப்புகளின் போது களப்பணி ஆற்றவில்லை. இந்நிலையில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே ஆளுநா் பதவியை ராஜிநாமா செய்து விட்டு வந்திருக்கிறேன். இதனை மக்கள் புரிந்திருக்கிறாா்கள். எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்கள் மாநில மக்களுக்கு சென்றடைவதை தடுக்கிறது. எனவே, மத்திய, மாநிலங்களிலும் ஒரே ஆட்சி நடைபெற்றால் மக்களுக்கு பல்வேறு நலன்கள் கிடைக்கும். தமிழகம் திராவிட கட்சிகளிடமிருந்து தேசிய கட்சியான பாஜகவுக்கு மாறுகின்ற காலம் வந்துவிட்டது என்றாா் அவா்.
தொடர்புடையது

பாஜகவை காண்பித்து கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை குறைத்த திமுக: தமிழிசை செளந்தரராஜன் விமா்சனம்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு நோ்காணல்

உகாதி வாழ்த்து சொல்வதில்கூட பிரிவினையா? முதல்வருக்கு தமிழிசை செளந்தரராஜன் கேள்வி

கட்சி தலைமை அனுமதித்தால் தோ்தலில் போட்டி: தமிழிசை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

