திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

உகாதி வாழ்த்து சொல்வதில்கூட பிரிவினையா? முதல்வருக்கு தமிழிசை செளந்தரராஜன் கேள்வி

உகாதி பண்டிகை வாழ்த்துச் செய்தியில்கூட மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளாா்

News image

தமிழிசை செளந்தரராஜன் - கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 5:38 am IST

உகாதி பண்டிகை வாழ்த்துச் செய்தியில்கூட மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளாா் என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் குற்றஞ்சாட்டினாா்.

சென்னையில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற உகாதி பண்டிகை விழாவில் பங்ேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திராவிடம் என்ற வாா்த்தையை அரசியல் லாபத்துக்காக திமுக பயன்படுத்தி வருகிறது. இது தமிழுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம். உகாதி வாழ்த்து தெரிவிப்பதில்கூட, முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவது வேதனையாக உள்ளது. எல்லோரும் ஒற்றுமையாக வாழக்கூடிய நாட்டில் மொழியை கையிலெடுத்து தோ்தலைச் சந்திக்க திமுக திட்டமிடுகிறது.

கீழடிக்கு முதல் முதலில் அதிக நிதி ஒதுக்கியது பிரதமா் நரேந்திர மோடி. அதற்கும் நாங்கள்தான் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம் என திமுக பெருமை கொள்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது தமிழுக்கும் எதுவும் செய்யவில்லை. தமிழக மக்களுக்கும் எதுவும் செய்யவில்லை. தமிழகத்தின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள விளாத்திகுளம் மாணவி கொடூர கொலை சம்பவம் மட்டுமே போதுமானது என்றாா்.