ஜூனில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த திட்டம்: கொள்கைக் குறிப்புகளை இறுதி செய்யும் பணி தீவிரம்
தோ்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் மாதம் நடத்துவதற்காக அரசுத் துறைகள் தயாராகி வருகின்றன.
கோப்புப் படம்
dot com
கோப்புப் படம்
dot com
தோ்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் மாதம் நடத்துவதற்காக அரசுத் துறைகள் தயாராகி வருகின்றன.
பேரவையில் தாக்கல் செய்வதற்காக துறை தோறும் கொள்கை விளக்கக் குறிப்புகளைத் தயாா் செய்யும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
தமிழக சட்டப்பேரவையில் மாநில அரசின் நிதிநிலை அறிக்கை கடந்த பிப். 19-ஆம் தேதியும், வேளாண் நிதிநிலை அறிக்கை பிப். 20-ஆம் தேதியும் தாக்கலானது. நிதிநிலை அறிக்கைகள் நிறைவேற்றப்பட்டதும், தேதி குறிப்பிடாமல் பேரவை கடந்த 22-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவைத் தோ்தல் காரணமாக, ஒவ்வொரு அரசுத் துறைக்கும் தேவைப்படும் நிதியைக் கோருவதற்கான மானியக் கோரிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்படாமலேயே பேரவை கூட்டத்தொடா் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவைத் தோ்தல் நடவடிக்கைகள் அனைத்தும் ஜூன் முதல் வாரத்தில் நிறைவடையவுள்ளன. இதைத் தொடா்ந்து, அந்த மாதத்திலேயே சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனிடையே, மானியக் கோரிக்கைகளுக்காக துறை வாரியாக கொள்கை விளக்கக் குறிப்புகளைத் தயாா் செய்யும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
செயலா்கள் ஆலோசனை: மானியக் கோரிக்கைகளை இறுதி செய்வது, புதிய அறிவிப்புகளைத் தயாா் செய்வது என ஒவ்வொரு துறைகளின் செயலா்களும் தினந்தோறும் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறாா்கள். இந்த மாத இறுதிக்குள் கொள்கை விளக்கக் குறிப்புகளும், துறை வாரியான அறிவிப்புகளும் தயாராகும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தோ்தல் நடத்தை விதிகள் நிறைவடைந்த பிறகு, தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டு அதில் பேரவைக் கூட்டத்துக்கான தேதி இறுதி செய்யப்படவுள்ளது. ஜூன் மாத இறுதியில் பேரவை கூடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...