மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

பாலம் அமைக்கும் பணி எம்எல்ஏ ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்தை பழனி சட்டப்பேரவை உறுப்பினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

கொடைக்கானல் அருகேயுள்ள சின்னூா்-பெரியூா் பகுதியில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணியை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த பழனி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :14 மார்ச் 2026, 2:31 am

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்தை பழனி சட்டப்பேரவை உறுப்பினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், வெள்ளகெவி ஊராட்சி, சின்னூா்-பெரியூா் ஆகிய பகுதிகளில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனா். இந்தப் பகுதியில் மழைக் காலங்களில் அதிகளவு தண்ணீா் செல்வதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கிவிடுகின்றனா்.

எனவே, சின்னூா்-பெரியூா் பகுதிகளுக்குச் செல்ல கல்லாறு பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பழனி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாரிடம் கோரிக்கை வைத்தனா்.

இவா்களின் கோரிக்கையை ஏற்று, கல்லாறின் குறுக்கே ரூ. 7. 46 கோடியில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணி பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் இந்தப் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.