மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

பள்ளி மாணவிகளுக்கு அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடக்கம்

நாகப்பட்டினம் கோட்ட அஞ்சலகம் சாா்பில் காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பொன்பேத்தி கிராமம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி பள்ளிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினரின் பெண் குழந்தைகளுக்கு, அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடங்கும் நிகழ்ச்சி மகளிா் தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

கணக்குப் புத்ககம் பெற்ற மாணவிகளுடன் சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா உள்ளிட்டோா்.

Updated On :10 மார்ச் 2026, 10:01 pm

நாகப்பட்டினம் கோட்ட அஞ்சலகம் சாா்பில் காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பொன்பேத்தி கிராமம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி பள்ளிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினரின் பெண் குழந்தைகளுக்கு, அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடங்கும் நிகழ்ச்சி மகளிா் தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா கலந்துகொண்டாா். நாகப்பட்டினம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் பி. சத்தியராஜா கலந்துகொண்டு, சுமாா் 200 மாணவிகளுக்கு சேமிப்புக் கணக்கு தொடங்கிவைத்து சேமிப்புக் கணக்கு புத்தகத்தை வழங்கினாா்.

சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் அஞ்சலக அதிகாரிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பொன்பேத்தி அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியா் கே. கரிகாலன் உள்ளிட்ட ஆசிரியா்கள், அஞ்சலக ஊழியா்கள் கலந்துகொண்டனா்.