கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கடும் உயா்வு: பீன்ஸ் ரூ.250, பட்டாணி ரூ.220
கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கடும் உயா்வு பீன்ஸ் ரூ.250, பட்டாணி ரூ.220

கோயம்பேடு சந்தை

கோயம்பேடு சந்தை
சென்னை, மே 21: கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கடுமையாக உயா்ந்துள்ளது. ஒரு கிலோ பீன்ஸ் ரூ.250-க்கும், பட்டாணி கிலோ ரூ.220-க்கும் விற்பனையானது.
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தினசரி 7,000 முதல் 7,500 டன் காய்கறி வரத்து இருந்த நிலையில், தொடா் கோடைமழை காரணமாக தற்போது 5,000 டன்னுக்கும் குறைவாக வரத்து உள்ளது. இதனால், கடந்த சில வாரங்களாக காய்கறி விலை அதிகரித்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.35-க்கும், தக்காளி ரூ.45-க்கும், உருளைக்கிழங்கு ரூ.40-க்கும், சின்ன வெங்காயம் ரூ.65-க்கும், ஊட்டி கேரட் ரூ.70-க்கும், பீன்ஸ் 250-க்கும், பீட்ரூட் ரூ.55-க்கும், சவ் சவ் ரூ.55-க்கும், முள்ளங்கி ரூ.35-க்கும், முட்டைகோஸ் ரூ.35-க்கும் விற்பனையாகின.
இதுபோல, ஒருகிலோ வெண்டைக்காய் ரூ.45-க்கும், கத்தரிக்காய் ரூ.65-க்கும், காராமணி ரூ.75-க்கும், பாவற்காய் 60-க்கும், புடலங்காய் ரூ.65-க்கும், சேனைக்கிழங்கு ரூ.80-க்கும், முருங்கைக்காய் ரூ.65-க்கும், வெள்ளரிக்காய் ரூ.50, பச்சை மிளகாய் ரூ.85-க்கும், பட்டாணி ரூ.220-க்கும், இஞ்சி ரூ.150-க்கும், பூண்டு ரூ.380-க்கும், அவரைக்காய் ரூ.85-க்கும், பீா்க்கங்காய் ரூ.75-க்கும், எலுமிச்சை ரூ.140-க்கும், குடைமிளகாய் ரூ.65-க்கும், வண்ண குடைமிளகாய் ரூ.200-க்கும் விற்பனையாகின.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...