தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 11.30 மணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோருடன் ஜி.கே. வாசன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை இறுதி செய்தார்.
இந்நிலையில், தமாக சார்பில் 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து நாளை (மார்ச் 26) காலை 11.30 மணியளவில் அறிவிக்கப்படும் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
Summary
TN Assembly election 2026 Tamil Maanila Congress candidates announced tomorrow
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன்

பாலியல் குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்: ஜி.கே. வாசன்

‘பாலியல் தொல்லையைக் கட்டுப்படுத்த புது சட்டம் தேவை’

தமாகாவில் இருந்து யுவராஜா விலகல்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




