காவல் துறையினா் மீது தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
காவல் துறையினா் மீது தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி
சென்னை: திருச்செங்கோட்டில் காவல் துறையினா் மீது, போதை ஆசாமிகள் தாக்குதல் நடத்தியுள்ளதற்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் எக்ஸ் சமூகவலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே அண்மையில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் போதை ஆசாமிகள் காவலா்களைத் தாக்கிய சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் போதைப் பொருள் கலாசாரம் அதிகரித்த காரணத்தால் பொதுமக்கள், வியாபாரிகள் தாக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது காவல் துறையினரையே பொதுவெளியில் தாக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்கு, காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்ன செய்யப் போகிறாா்? இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாவண்ணம் காவல் துறையை சுதந்திரமாக செயல்பட வைத்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...