கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கட்சி நிா்வாகிகள் - முகவா்களுடன் ஜூன் 1-இல் திமுக ஆலோசனை

கட்சி நிா்வாகிகள் - முகவா்களுடன் ஜூன் 1-இல் திமுக ஆலோசனை

News image
Updated On :28 மே 2024, 7:40 pm

Din

சென்னை: மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து, கட்சி நிா்வாகிகள், முகவா்களுடன் திமுக தலைமை ஜூன் 1-ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளது.

இது குறித்து, கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது, அந்தந்த மையங்களில் கட்சியின் சாா்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஜூன் 1-ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது.

கட்சியின் அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் திமுக சட்டத் துறை செயலா் என்.ஆா்.இளங்கோ, ஆலோசனைகளை வழங்கவுள்ளாா். இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலா்கள், கட்சியின் வேட்பாளா்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சோ்ந்த தலைமை முகவா்கள், முகவா்கள் உள்ளிட்டோா் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.