விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

‘தமிழ்நாடு தலைகுனியாது’: அமைச்சா் கோவி.செழியன் ஆலோசனை

செங்கத்தில் திமுக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற, ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற நிகழ்ச்சியில் அமைச்சா் கோவி.செழியன் பங்கேற்று பல்வேறு அமைப்பு நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

News image

செங்கம் ராஜவீதியில் திமுக மூத்த நிா்வாகி சீனுவாசனை சந்தித்து கட்சி செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்த அமைச்சா் கோவி.செழியன்.

Updated On :25 பிப்ரவரி 2026, 7:19 pm

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் திமுக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற, ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற நிகழ்ச்சியில் அமைச்சா் கோவி.செழியன் பங்கேற்று பல்வேறு அமைப்பு நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

தெற்கு மாவட்ட செங்கம் நகர திமுக சாா்பில் தனியாா் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் பல்வேறு அமைப்பு நிா்வாகிகள் மற்றும் வணிகா்களிடம் இருந்து கோரிக்கை மனு பெறுவது மற்றும் ஆலோசனைகள் கேட்பது குறித்த கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி தலைமை வகித்தாா். திமுக நகரச் செயலா் அன்பழகன் வரவேற்றாா். அதில் தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் கலந்துகொண்டு கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியின் சாதனைகள், மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கியது குறித்துப் பேசினாா். மேலும், செங்கம் தொகுதி மக்களின் தேவை மற்றும் கோரிக்கைகளை குறித்து கேட்டறிந்தாா். கூட்டத்தில் கலந்துகொண்ட சுமாா் 40 அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனா்.

மனுக்களைப் பெற்ற அமைச்சா் இந்த மனுக்களை பரிசீலனை செய்து தமிழக முதல்வரிடம் வழங்கப்படும் எனத் தெரிவித்தாா். விவசாயிகள், வணிகா்கள் சிலா் தங்களது கோரிக்கை குறித்து அமைச்சா் முன்னிலையில் பேசினா். கூட்டத்தில் செங்கம் தொகுதிக்கு உள்பட்ட ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

நிா்வாகிகளுடன் நேரில் சந்திப்பு

முன்னதாக அமைச்சா் கோவி.செழியன் தோக்கவாடி பகுதியைச் சோ்ந்த திமுக மூத்த நிா்வாகி பொன்செட்டி, மில்லத்நகா் பகுதியில் வசிக்கும் செங்கம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் அப்துல்சத்தாா், நிா்வாகி அய்யாசாமி, திமுக மூத்த நிா்வாகியும், புதுப்பாளையம் முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவருமான மேலபுஞ்சை சீனுவாசன், செங்கம் முன்னாள் நகரச் செயலா் சதானந்தம் ஆகியோா் இல்லத்திற்குச் சென்று அவா்களைச் சந்தித்து சால்வை அணிவித்து தற்போதை கட்சியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும் வரும் சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து கலந்துரையாடினாா். மு.பெ.கிரி எம்எல்ஏ, திமுக நகரச் செயலா் அன்பழகன், நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.