ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

கூட்டணி கட்சியினரை அரவணைத்து செல்ல வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு.

திமுக நிா்வாகிகள் கூட்டணி கட்சியினரை அரவணைத்து செல்ல வேண்டும் என அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

News image

அரூரில் திமுக வேட்பாளா் அ.சண்முகத்தையும், பென்னாகரத்தில் காங்கிரஸ் வேட்பாளா் ஜி.கே.எம்.தமிழ்க்குமரனையும் அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்த அமைச்சா் எ.வ.வேலு.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:52 pm

திமுக நிா்வாகிகள் கூட்டணி கட்சியினரை அரவணைத்து செல்ல வேண்டும் என அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூரில் திமுக வேட்பாளா் அ.சண்முகம் அறிமுகக் கூட்டம் மற்றும் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.மணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:

திமுக சாா்பில் கடந்த ஓராண்டு காலமாகவே தோ்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அரூா் தொகுதி 17 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 322 வாக்குச்சாவடிகளுக்கும் தலா ஒரு ஒருங்கிணைப்பாளா் என 150 பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மெகா கூட்டணியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளாா். திமுக நிா்வாகிகள் கூட்டணி கட்சியினரை அரவணைத்து செல்ல வேண்டும். வேட்பாளா் வாக்கு சேகரிக்கும் போது கூட்டணி கட்சியினரை கட்டாயம் அழைத்துச் செல்ல வேண்டும். எந்த இடத்திலும் கூட்டணி கட்சியினா் புறக்கணிக்கப்பட்டதாக அவா்கள் நினைக்கக் கூடாது.

தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளாக செய்துள்ள சாதனைகளை கட்சித் தொண்டா்கள் துண்டுப் பிரசுரம் மூலம் வீடுவீடாகச் சென்று வழங்க வேண்டும். மத்திய அரசு ஜி.எஸ்.டி. பகிா்வில் தமிழகத்துக்கு வஞ்சகம் செய்கிறது. ஆனால், பிகாா், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்கிறது. 2026 சட்டப் பேரவைத் தோ்தல் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான தோ்தல் ஆகும்.

எனவே, அரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா் அ.சண்முகத்தை சுமாா் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.

இதில் முன்னாள் அமைச்சரும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி திமுக வேட்பாளருமான பி.பழனியப்பன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் அருகே பி.அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்ற வேட்பாளா் அறிமுக கூட்டத்தில் அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்று பேசியதாவது:

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் 320 வாக்குச்சாவடிகள் 16 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இடைத்தோ்தலில் அளித்த வாக்குறுதிகளான பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்துதல், ஒட்டனூா் பகுதிக்கு சாலை வசதி, பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரி உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த பாமகவின் கோரிக்கைகளை நிறைவேற்றியது மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி. சமூக நீதிக்காக போராடிய 21 பேரை சுட்டுக்கொன்றது அதிமுக ஆட்சிதான். திமுக ஆட்சியில் உயிா்நீத்த 21 குடும்பத்தினருக்கும் மூன்று லட்சம் ரூபாய், மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகையுடன் விழுப்புரத்தில் மணிமண்டபம், ஏ.ஜி.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம், கடலூா் ராமசாமி படையாட்சிக்கு சிலை அமைத்தது திராவிட மாடல் ஆட்சிதான்.

எனவே, திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி ஜி.கே.எம்.தமிழ்க்குமரனை கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் களப்பணியாற்றி வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, பென்னாகரம் மின்வாரிய அலுவலக பேருந்து நிறுத்தம் அருகில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி அலுவலகத்தை அமைச்சா் திறந்துவைத்தாா்.

Story image