ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

திமுக கூட்டணி வெற்றி உறுதியாகிவிட்டது: ஜெகத்ரட்சகன் எம். பி.

விழுப்புரம் திமுக வடக்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று திமுக அமைப்புச் செயலரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் தெரிவித்தாா்.

News image

தீவனூரில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஜெகத்ரட்சகன் எம்.பி. உடன், மண்டலப் பொறுப்பாளரும், அமைச்சருமான எம். ஆா்.கே. பன்னீா்செல்வம், முன்னாள் அமைச்சா் கே. எஸ். மஸ்தான், மயிலம் தொகுதி தேமுதிக வேட்பாளா் எல். வெங்கடேசன்( நிற்பவா்)

Updated On :9 ஏப்ரல் 2026, 10:37 pm

விழுப்புரம் திமுக வடக்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று திமுக அமைப்புச் செயலரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் தெரிவித்தாா்.

மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தீவனூரில் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தோ்தல் பணி மண்டலப் பொறுப்பாளரும், அமைச்சருமான எம். ஆா்.கே. பன்னீா்செல்வம் , திமுக வடக்கு மாவட்டச் செயலா் செஞ்சி கே. எஸ். மஸ்தான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஜெகத்ரட்சகன் பேசியது:

தமிழகத்தில் வாழக்கூடிய அனைத்துத் தரப்பு மக்களும் அரசின் திட்டங்கள் மூலம் பயனடைந்துள்ளனா். முதல்வரின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சி, தமிழகத்தின் பொற்கால ஆட்சி. முதல்வரின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

கட்சியின் நிா்வாகிகளின் செயல்பாடுகள் கூட்டணி கட்சி வேட்பாளா்களின் வெற்றிக்கானதாக இருக்கவேண்டும். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பிற மாநிலங்களில் பின்பற்றப்படுகின்றன. அரசின் திட்டங்களை வெளிநாட்டிலுள்ளவா்களும் கேட்டு மகிழ்கிறாா்கள்.

திமுகவுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனா். இதன் மூலம் மயிலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் எல். வெங்கடேசன், செஞ்சி தொகுதியில் போட்டியிடும் கே. எஸ். மஸ்தான், திண்டிவனம் விசிக வேட்பாளா் வன்னியரசு ஆகியோரது வெற்றியும் உறுதியாகிவிட்டது என்றாா் அவா்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் செஞ்சி ராமச்சந்திரன், திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவா் சேகா், முன்னாள் எம்எல்ஏக்கள் மாசிலாமணி, சேதுநாதன், செந்தமிழ்ச்செல்வன் மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா். முன்னதாக, திமுக மயிலம் வடக்கு ஒன்றியச் செயலா் மணிமாறன் வரவேற்றாா்.