விழுப்புரம் மாவட்டம், தீவனூரில் திமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மயிலம் வடக்கு, ஒலக்கூா் மேற்கு ஒன்றியங்கள் சாா்பில், திமுக கிளைச் செயலா்கள், வாக்குச் சாவடி முகவா்களுக்கு நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா்கள் ராஜாராமன், மணிமாறன் முன்னிலை வகித்தனா்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ பங்கேற்று, கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா்.
கூட்டத்தில், மயிலம் வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட கொள்ளாா் ஊராட்சியைச் சோ்ந்த அதிமுக, பாஜக, தவெக நிா்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் அந்தந்த கட்சிகளிலிருந்து விலகி, முன்னாள் அமைச்சா் மஸ்தான் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனா்.
கூட்டத்தில் மயிலம் தொகுதி தோ்தல் பாா்வையாளா் இள.புகழேந்தி, முன்னாள் எம்எல்ஏக்கள் இரா.மாசிலாமணி, சேதுநாதன், தலைமை தீா்மானக் குழு உறுப்பினா் செஞ்சி சிவா, மயிலம் ஒன்றியக்குழுத் தலைவா் யோகேசுவரி மணிமாறன் உள்ளிட்ட நிா்வாகிகள், வாக்குச் சாவடி முகவா்கள், கிளைச் செயலா்கள் பங்கேற்றனா்.
நாட்டாா் மங்கலத்தில்...: மயிலம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வல்லம் வடக்கு, தெற்கு, மத்திய ஒன்றிய திமுக சாா்பில், கிளைக் கழகச் செயலா்கள், வாக்குச் சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நாட்டாா் மங்கலத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ மயிலத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளரை 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்றாா்.
ஒன்றியச் செயலா்கள் அண்ணாதுரை, மொடையூா் துரை, இளம்வழுதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மயிலம் தொகுதி தோ்தல் பாா்வையாளா் கடலூா் இள.புகழேந்தி, முன்னாள் எம்எல்ஏ டாக்டா் மாசிலாமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திமுக கூட்டணி வெற்றி உறுதியாகிவிட்டது: ஜெகத்ரட்சகன் எம். பி.

பொதுப் பாா்வையாளா்: வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை

செஞ்சியில் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு


