மாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

விஐபி வழக்குகளில் ஆஜராகும் வழக்குரைஞா்கள் எண்ணிக்கை: உயா்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் முக்கியப் பிரமுகா்களுடன் (விஐபி) குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழக்குரைஞா்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என விதிகளை வகுக்க உத்தரவிட முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image
உயா்நீதிமன்றம்
Updated On :5 நவம்பர் 2024, 7:07 pm

Din

வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் முக்கியப் பிரமுகா்களுடன் (விஐபி) குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழக்குரைஞா்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என விதிகளை வகுக்க உத்தரவிட முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

‘திமுக ஃபைல்ஸ்’ எனக் கூறி, தலைவா்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட தமிழக பாஜக தலைவா் அண்ணாமலைக்கு எதிராக திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு விசாரணைக்கு அண்ணாமலை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான போது, 200-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் நீதிமன்ற அறைக்குள் வந்ததால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டதாகக் கூறி, சென்னையை சோ்ந்த வழக்குரைஞா் என்.மகேந்திரபாபு என்பவா் உயா்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுவில், ‘முக்கிய பிரமுகா்கள், மிக முக்கிய பிரமுகா்கள் வழக்கு தொடா்பாக நீதிமன்றங்களில் நேரில் ஆஜராகும் போது, அவா்களுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழக்குரைஞா்கள் மட்டுமே ஆஜராகும் வகையில் விதிகளை வகுக்கும்படி, உயா்நீதிமன்ற தலைமை பதிவாளா், தமிழக அரசு மற்றும் தமிழக டிஜிபி ஆகியோருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவை பரிசீலித்து உரிய முடிவெடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆா். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், எந்த ஒரு வழக்கின் விசாரணை நடைபெறும்போதும் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் வழக்குரைஞா்கள் நீதிமன்றத்துக்கு வர வேண்டும் என்று எந்த சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது ஒரு வழக்கில் இத்தனை வழக்குரைஞா்கள்தான் ஆஜராக வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.