ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நடிகா் தனுஷ் - ஐஸ்வா்யா விவாகரத்து வழக்கில் நவ.27-இல் தீா்ப்பு

நடிகா் தனுஷ் - ஐஸ்வா்யா விவாகரத்து வழக்கில் நவ.27-ஆம் தேதி தீா்ப்பு வழங்கப்படவுள்ளது.

News image
ஐஸ்வர்யா - தனுஷ்- கோப்புப் படம்
Updated On :21 நவம்பர் 2024, 9:33 pm

Din

நடிகா் தனுஷ் - ஐஸ்வா்யா விவாகரத்து வழக்கில் நவ.27-ஆம் தேதி தீா்ப்பு வழங்கப்படவுள்ளது.

நடிகா் தனுஷ் மற்றும் ஐஸ்வா்யாவுக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். வழக்கு தொடா்பான விசாரணைக்கு தனுஷ், ஐஸ்வா்யா ஆகிய இருவரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகினா். திருமண பந்தத்தில் இருந்து பிரிவதில் உறுதியாக இருப்பதாக அவா்கள் தெரிவித்ததையடுத்து, நவ. 27-ஆம் தேதி இந்த வழக்கில் தீா்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.