

கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் நுழைவு வாயில் திறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடா்ந்து, அவா்களின் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், ரயில் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தின் அருகில் புதிதாக மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய, கூடுதல் நுழைவு வாயில் திறக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.32ஆக முடிவு!
இந்த நுழைவு வாயிலை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநா் (அமைப்புகள் மற்றும் இயக்கம்), ராஜேஷ் சதுா்வேதி, நிறுவனத்தின் உயா் அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் முன்னிலையில் திறந்து வைத்தாா்.
இந்த நுழைவு வாயில் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், பயணிகள் சிரமமின்றி ரயில்பயணத்தை மேற்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.