டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.32ஆக முடிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.84.32 ஆக முடிவடைந்தது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.84.32 ஆக முடிவடைந்தது.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், சீன பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிப்பேன் என்றும், மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பேன் என்று தெரிவித்ததால், ரிஸ்க் சென்டிமென்ட் பாதித்துள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: புதுவை, காரைக்கால்: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகபட்சமாக ரூ.84.22 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.84.35 ஆகவும் சென்றது. டாலருக்கு எதிராக ரூ.84.32 என்ற தற்காலிக அமர்வில், இது அதன் முந்தைய முடிவை விட 3 பைசா சரிவை பதிவு செய்தது.

நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.84.29-ஆக இருந்தது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.79% உயர்ந்து பேரலுக்கு 73.59 டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com