பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 36 காசுகள் சரிந்து ரூ. 90.70 ஆக நிறைவு!

இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 36 காசுகள் சரிந்து ரூ. 90.70ஆக நிலைபெற்றது.

News image
கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 12:58 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட ஏற்றம் ஆகியவற்றால், இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 36 காசுகள் சரிந்து ரூ. 90.70 ஆக நிலைபெற்றது.

ரிசர்வ் வங்கியின் முக்கிய கடன் விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்ததைத் தொடர்ந்து, வர்த்தக அமர்வின் முதல் பாதியில் ரூபாயின் மதிப்பு உயர்ந்தது, இருப்பினும் தொடர்ச்சியாக வெளிநாட்டு நிதி வெளியேற்றத்தால், இந்திய ரூபாயின் மீது அழுத்தம் ஏற்படுத்தியதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 90.28 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கியது. வர்த்தக அமர்வின் போது இந்திய ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக ரூ. 90.18 சென்ற நிலையில் குறைந்தபட்சமாக ரூ. 90.83 என்ற அளவில் வர்த்தகமானது. இறுதியில், அதன் முந்தைய நாள் முடிவிலிருந்து 36 காசுகள் சரிந்து ரூ. 90.70ஆக நிலைபெற்றது.

நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 90.34 என்ற அளவில் நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.