தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

தமிழகத்தில் அக்.8 வரை கன மழைக்கு வாய்ப்பு

News image
Updated On :4 அக்டோபர் 2024, 5:51 am

Din

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (அக்.4) முதல் அக்.8 வரை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சதீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த சுழற்சியை நோக்கி வங்கக்கடல் காற்றும் பயணிப்பதால், தமிழகத்தில் மழைக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (அக்.4) முதல் அக்.8 வரை இடி, மின்னலுடன் கூடிய கன மழை  பெய்ய வாய்ப்புள்ளது.

இதில், அக்.4-ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூா், பெரம்பலூா், கள்ளக்குறிச்சி, வேலூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது

சென்னைக்கும் மழை வாய்ப்பு: சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் அக்.4, 5-ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.