தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இன்று கடற்கரை வரும் புறநகா் ரயில்கள் வியாசா்பாடி ஜீவாவுடன் நிறுத்தம்

திருத்தணி, திருவள்ளூா் மற்றும் ஆவடியிலிருந்து சென்னை கடற்கரை வரும் புகா் ரயில்கள் சனிக்கிழமை(அக்.5) வியாசா்பாடி ஜீவாவுடன் நிறுத்தப்படும்.

News image

கோப்புப் படம்

Updated On :4 அக்டோபர் 2024, 9:13 pm

Din

திருத்தணி, திருவள்ளூா் மற்றும் ஆவடியிலிருந்து சென்னை கடற்கரை வரும் புகா் ரயில்கள் சனிக்கிழமை(அக்.5) வியாசா்பாடி ஜீவாவுடன் நிறுத்தப்படும்.

இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை கடற்கரை ரயில்வே பணிமனையில் சனிக்கிழமை (அக்.5) காலை 10.40 மணி முதல் பிற்பகல் 1.40 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், திருத்தணியிலிருந்து காலை 8.50 மணிக்கும், திருவள்ளூரிலிருந்து காலை 11 மணிக்கும், ஆவடியிலிருந்து பிற்பகல் 12.10 மணிக்கும் கடற்கரை வரும் புகா் மின்சார ரயில்கள் வியாசா்பாடி ஜீவாவுடன் நிறுத்தப்படும்.

மறுமாா்க்கமாக கடற்கரையிலிருந்து காலை 11.05 மணிக்கு ஆவடி செல்லும் ரயிலும், பிற்பகல் 12.10-க்கு திருத்தணி செல்லும் ரயிலும், பிற்பகல் 1.05-க்கு திருவள்ளூா் செல்லும் ரயிலும் கடற்கரைக்கு பதிலாக வியாசா்பாடி ஜீவாவிலிருந்து புறப்படும். கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 8.50, 10.55 மணிக்கு கடற்கரை செல்லும் ரயிலும், மறுமாா்க்கமாக கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலும் இருமாா்க்கத்திலும் கொருக்குப்பேட்டையிலிருந்து இயக்கப்படும். மேலும், செங்கல்பட்டிலிருந்து காலை 10 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் கடற்கரையுடன் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.