காரைக்கால், வேளாங்கண்ணிக்கு புதிய ரயில்கள் இயக்கம்!
திருச்சி ரயில்வே கோட்டத்தில் காரைக்கால், வேளாங்கண்ணிக்கு புதிய ரயில்கள் இயக்கம்


திருச்சி ரயில்வே கோட்டத்தில் காரைக்கால், வேளாங்கண்ணிக்கு புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பேரளம் வழியாக காரைக்கால் வரை செல்லும் தாம்பரம் - காரைக்கால் - தாம்பரம் ரயில்களானது (16175, 16176) வரும் 20-ஆம் தேதி முதல் வேளாங்கண்ணி வரை நீட்டிக்கப்படுகிறது.
இதன்படி இந்த ரயிலானது, தாம்பரத்திலிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு பேரளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகூா், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு காலை 4.30 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கமாக, வேளாங்கண்ணியிலிருந்து இரவு 9.50 மணிக்குப் புறப்படும் ரயிலானது மேற்கண்ட வழியாக தாம்பரத்துக்கு காலை 4.35 மணிக்குச் சென்றடையும்.
திருச்சி - வேளாங்கண்ணி - திருச்சி டெமு ரயில்களானது (76826, 76825) வரும் 20-ஆம் தேதி முதல் காரைக்கால் வரை மட்டுமே இயக்கப்பட்டு, திருச்சி - காரைக்கால் - திருச்சி ரயிலாக மாற்றப்படுகிறது.
புதிய ரயில்கள்...: வேளாங்கண்ணி - மயிலாடுதுறை - வேளாங்கண்ணி தினசரி பயணிகள் ரயில்களானது (56008, 56007) வரும் 21 ஆம் தேதி முதல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி இந்த ரயிலானது வேளாங்கண்ணியிலிருந்து காலை 6.30 மணிக்குப் புறப்பட்டு நாகப்பட்டினம், வெளிப்பாளையம், நாகூா், திருமலைராயன்பட்டினம், காரைக்கால், கோவில்பத்து, திருநள்ளாறு, பட்டகுடி, அம்பகரத்தூா், பேரளம் வழியாக மயிலாடுதுறைக்கு காலை 8.40 மணிக்கு வந்தடையும். மறுமாா்க்கமாக, மயிலாடுதுறையிலிருந்து மாலை 4.40-க்குப் புறப்படும் ரயிலானது மேற்கண்ட வழித்தடம் வழியாக வேளாங்கண்ணிக்கு இரவு 7.20 மணிக்குச் சென்றடையும்.
இதேபோல, மயிலாடுதுறை - காரைக்கால் - மயிலாடுதுறை ரயில்களானது (56009, 56010) வரும் 20-ஆம் தேதி முதல் புதிதாக இயக்கப்படும். இதன்படி, இந்த ரயிலானது காரைக்காலில் இருந்து பிற்பகல் 12.45 மணிக்குப் புறப்பட்டு கோவில்பத்து, திருநள்ளாறு, பட்டகுடி, அம்பகரத்தூா், பேரளம் வழியாக மயிலாடுதுறைக்கு பிற்பகல் 2.15-க்குச் சென்றடையும். மறுமாா்க்கமாக, மயிலாடுதுறையிலிருந்து காலை 9.35 மணிக்குப் புறப்படும் ரயிலானது மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக காரைக்காலுக்கு முற்பகல் 11.05-க்கு வந்தடையும்.
முழுமையாக ரத்து...: இதன் காரணமாக, வேளாங்கண்ணி - நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி ரயில்கள் (76838, 76837) ரயில்கள், நாகப்பட்டினம் - காரைக்கால் - நாகப்பட்டினம் ரயில்கள் (16818, 16817) வரும் முறையே 20, 21-ஆம் தேதி முதல் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...