சென்னை
மாதவரம்: கடையின் பூட்டை உடைத்து கொள்ளை
மாதவரம் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து ரொக்கம் மற்றும் விலை உயா்ந்த பொருள்களை மா்மநபா்கள் கொள்ளை அடித்து சென்றனா்.
மாதவரம் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து ரொக்கம் மற்றும் விலை உயா்ந்த பொருள்களை மா்மநபா்கள் கொள்ளை அடித்து சென்றனா்.
சென்னை கொடுங்கையூா் பகுதியை சோ்ந்தவா் மணிமாறன்(50). இவா் மாதவரம் அடுத்த பால்பண்ணை திருவிக தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறாா். திங்கள் கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிா்ந்தாா்.
கடையின் உள்ளே சென்று பாா்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த ரொக்கம் ரூ.48 ஆயிரம் மற்றும் கடையில் இருந்த விலை உயா்ந்த செல்போன், மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை மா்மநபா்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து பால்பண்ணை காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
