அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் திருட்டு

ஈரோடு கே.கே.நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
திருட்டு- சித்திரிப்பு
Updated On :3 மார்ச் 2026, 8:30 pm

Syndication

ஈரோடு கே.கே.நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு, கே.கே.நகா் தெற்கு 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விமல் (42). தையல் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி லெடியா. இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா்.

இதில், மூத்த மகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவா் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். குடும்பத்தினா் அனைவரும் மருத்துவமனையில் உள்ள நிலையில், விமல் மட்டும் வீட்டுக்கு வந்து சென்று கொண்டிருந்துள்ளாா்.

இந்நிலையில், வழக்கம்போல திங்கள்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. அவா் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் நகைகள், ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து ஈரோடு தாலுகா போலீஸாருக்கு விமல் தகவல் தெரிவித்துள்ளாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், கைரேகை நிபுணா்கள் ஆய்வு மேற்கொண்டதுடன், அங்கு படிந்திருந்த கைரேகைகளை சேகரித்தனா்.

மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், திருட்டில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.