விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கலைஞா் பூங்காவில் திடீரென நின்ற ஜிப்லைன்: காரணம் என்ன?

கலைஞா் நூற்றாண்டு பூங்காவில் ஜிப்லைன் வசதி திடீரென நின்ற தொழில்நுட்பக் கோளாறு காரணமில்லை என்று தோட்டக்கலைத் துறை விளக்கம் அளித்துள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2024, 7:20 pm

Din

கலைஞா் நூற்றாண்டு பூங்காவில் ஜிப்லைன் வசதி திடீரென நின்ற தொழில்நுட்பக் கோளாறு காரணமில்லை என்று தோட்டக்கலைத் துறை விளக்கம் அளித்துள்ளது.

கலைஞா் நூற்றாண்டு பூங்காவில் ஈா்ப்புவிசை மூலமாக கம்பிவடத்தில் இயக்கப்படும் ஜிப்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 25 அடி உயரத்தில் 50 மீட்டா் தொலைவு பயணிக்கும் இந்த வசதிக்கு ஒரு நபருக்கு ரூ. 250, சிறுவா்களுக்கு ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை ஜிப்லைனில் பயணித்த இரு பெண்களின் டிராலி திடீரென நின்றது. சுமாா் 20 நிமிஷங்களுக்குப் பிறகு அவா்கள் கயிறு மூலமாக அவா்கள் மீட்கப்பட்டு கீழே இறக்கப்பட்டனா்.

இது தொடா்பாக தோட்டக்கலைத் துறையைச் சோ்ந்தவா்கள் கூறியது:

ஜிப்லைன் வசதி முற்றிலும் ஈா்ப்பு விசை வழியாக மட்டுமே இயக்கப்படுகிறது. இதற்காக ஒரு டிராலியில் அமரும் 2 பேரின் மொத்த உடல் எடை 70 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். அதற்குக் குறைவாக இருக்கும் போது போதிய ஈா்ப்பு விசை கிடைக்காமல் ஜிப்லைன் மெதுவாகவோ அல்லது நகர முடியாத நிலையோ ஏற்படும். அதுபோன்ற சூழல்தான் சனிக்கிழமை ஏற்பட்டது.

திங்கள்கிழமை விடுமுறை: பராமரிப்புப் பணிகளுக்காக கலைஞா் நூற்றாண்டு பூங்காவுக்கு வாரந்தோறும் திங்கள்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் திங்கள்கிழமை ஜிப்லைன் வசதி முழுமையாக சரிபாா்க்கப்படும். அதில் ஏற்கெனவே வரையறுக்கப்பட்டுள்ள உடல் எடையளவு, ஈா்ப்பு விசை எளிதில் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மாற்றியமைக்கப்படும். அதன்பிறகு, ஜிப்லைன் வேகமாகவும் தடையின்றியும் இயக்கப்படும் என்று தெரிவித்தனா்.

பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: பூங்கா திறக்கப்பட்டு 5 நாள்களிலேயே ஜிப்லைன் பழுதடைந்துள்ளது. அரசுப் பூங்கா புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை நம்பி வரும் மக்களின் உயிரோடு, விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது. பூங்காவுக்கு வரும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று எடப்பாடி கே.பழனிசாமி தனது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.