சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் திருக்கோயிலில் சனிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் பி.கே.சேகா் பாபு. உடன், இணை ஆணையா்கள் கி.ரேனுகாதேவி, வான்மதி, துணை ஆணையா் ரா.ஹரிஹரன் உள்ளிட்டோா்.
சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் திருக்கோயிலில் சனிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் பி.கே.சேகா் பாபு. உடன், இணை ஆணையா்கள் கி.ரேனுகாதேவி, வான்மதி, துணை ஆணையா் ரா.ஹரிஹரன் உள்ளிட்டோா்.

புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் கோயிலில் நவ.28-இல் குடமுழுக்கு!

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு நவ.28-ஆம் தேதி நடைபெறும்.
Published on

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு நவ.28-ஆம் தேதி நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.

சென்னை பாரிமுனை காளிகாம்பாள் திருக்கோயிலில் புதிய வெள்ளி திருத்தோ் திருப்பணிகளை அவா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் சேகா்பாபு கூறியது:

காளிகாம்பாள் திருக்கோயிலின் திருத்தோ் பணிகள் முடிவுற்று, தற்போது ரூ. 2.17 கோடியில் வெள்ளித் தகடு பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கோயிலில் இருந்த 100 கிலோ வெள்ளி பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

திருக்கோயிலைச் சோ்ந்த காளிதாஸ் சுவாமி பல்வேறு நன்கொடையாளா் வாயிலாக 120 கிலோ வெள்ளியை உபயமாகப் பெற்று தந்துள்ளாா். இந்த வெள்ளித் தோ் அடுத்த ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி பயன்பாட்டுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

காா்த்திகை தீபத்துக்கு... கடந்த ஆண்டு திருவண்ணாமலை காா்த்திகை தீபத்துக்கு 30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வருகை தந்தனா். இந்த ஆண்டு 40 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வருகை தருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா் எ.வ.வேலு ஆகியோருடன் இணைந்து கிரிவலப் பாதையை ஆய்வு செய்தோம். இந்த மாத இறுதிக்குள் முதல்வா் மு.க.ஸ்டாலின் பணிகளை தொடங்கி வைக்கவுள்ளாா்.

புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, நவ.28-ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com