ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்

வானிலை மையம் கணித்தபடி ஆந்திரம் அருகே வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது.

News image
வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (கோப்புப் படம்)
Updated On :5 செப்டம்பர் 2024, 11:15 pm

Din

வானிலை மையம் கணித்தபடி ஆந்திரம் அருகே வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிஸா கடற்கரைக்கும் இடைப்பட்ட வங்கக் கடலில் வியாழக்கிழமை காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது செப்.6, 7 ஆகிய தேதிகளில் வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதனால், ஆந்திரம், ஒடிஸா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக வானிலை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (செப். 6) முதல் செப். 11-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, புகா் பகுதிகளில் செப்.6, 7 ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெயில் சதம்: தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.44 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம் - 103.64, நாகப்பட்டினம் - 102.38, திருச்சி - 100.94, காரைக்கால் - 100.4 என 5 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: செப்.6 முதல் செப்.9-ஆம் தேதி வரை மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள், அதையொட்டிய குமரிக் கடலும், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலிலும் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.