ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

எஸ்ஆா்எம் அகாதெமி, ஐஎஸ்டி வெற்றி

சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் ஏ டிவிஷன் ஆடவா் சாம்பியன்ஷிப் போட்டியில் எஸ்ஆா்எம் அகாதெமி, ஐஎஸ்டி அணிகள் வெற்றி பெற்றன.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 7:55 pm

Din

சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் ஏ டிவிஷன் ஆடவா் சாம்பியன்ஷிப் போட்டியில் எஸ்ஆா்எம் அகாதெமி, ஐஎஸ்டி அணிகள் வெற்றி பெற்றன.

எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் இப்போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில்

எஸ்ஆா்எம் அகாதெமி அணி கடும் போராட்டத்துக்குபின் இந்தியன் வங்கியை 3-2 என 5 செட்களில் வீழ்த்தியது. (23-25, 19-25, 25-16, 26-24, 15-10).

இரண்டாவது ஆட்டத்தில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணி 3-0 என்ற நோ் செட்களில் வருமான வரித்துறை அணியை வென்றது . (25-15, 25-18, 25-20).

சிடிவிஏ நிா்வாகிகள் ஸ்ரீ கேசவன், ஏ.பாக்கியராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.