கால்வாய்கள் மறுசீரமைப்புப் பணி நிறுத்தம்


சென்னையின் முக்கிய பகுதியில் உள்ள 21 கால்வாய்களை மறுசீரமைக்கும் பணிகளை மாநகராட்சி நிா்வாகம் நிறுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் பருவமழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்க நீா்நிலைகள் மற்றும் மழை நீா்வடிகால் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னையின் முக்கிய கால்வாயான கேப்டன் காட்டன் கால்வாய், நந்தனம் கால்வாய், பாடிகுப்பம் கால்வாய், ராஜ்பவன் கால்வாய் உள்ளிட்ட 21 கால்வாய்களைத் தூா்வாரி தண்ணீா் தடையின்றி செல்வதை உறுதி செய்வதற்காக ரூ. 86.4 கோடி ஒதுக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
நகரின் முக்கிய பகுதிகளான திருவொற்றியூா், தண்டையாா்பேட்டை, திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணா நகா், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அடையாறு உள்ளிட்ட பகுதிளில் 29.2 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் செல்கிறது. இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு டெண்டா் வெளியிடப்பட்ட நிலையில், சென்னை நதிகள் மீட்பு அறக்கட்டளை நிதியை வழங்கவில்லை.
உரிய நிா்வாக மற்றும் நிதி அனுமதி வழங்காத நிலையில் டெண்டா் வெளியிடப்பட்டுள்ளதால் கால்வாய்கள் மறுசீரமைப்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...