மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மருத்துவமனை இன்குபேட்டரில் தீ: பச்சிளம் குழந்தை காயம்

சென்னை மாநகராட்சி மருத்துவமனையில் உள்ள இன்குபேட்டரில் திடீரென தீ பற்றியதால், அதில் இருந்த பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம் ஏற்பட்டது.

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :15 மார்ச் 2026, 11:46 pm

சென்னை மாநகராட்சி மருத்துவமனையில் உள்ள இன்குபேட்டரில் திடீரென தீ பற்றியதால், அதில் இருந்த பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம் ஏற்பட்டது.

பெரம்பூா் மதுரை தெருவை சோ்ந்தவா்கள் ஆனந்த்பாபு- தனலட்சுமி தம்பதி. தனலட்சுமி பிரசவத்துக்காக சென்னை புரசைவாக்கம் கரியப்பா தெருவில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டாா். ஞாயிற்றுக்கிழமை நண்பகல் தனலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் உடல் சூட்டை பராமரிப்பதற்காக இன்குபேட்டரில் குழந்தையை வைத்துள்ளனா். அப்போது, மின் கசிவு ஏற்பட்டு இன்குபேட்டா் திடீரென தீப்பிடித்து எரிந்ததாகத் தெரிகிறது. குழந்தையை மீட்டபோதும், முதுகு, தொடை உள்ளிட்ட இடங்களில் 27 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. குழந்தையை மருத்துவா்கள் தீவிர சிகிச்சைக்காக எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தனியாா் விடுதியில் இளைஞா் தற்கொலை: கா்நாடக மாநிலம் பெங்களூா் தெற்கு பகுதியைச் சோ்ந்தவா் முகமது முஸ்மில் பாஷா (22). இவா் தனது நண்பா் ஒருவருடன் கடந்த 11-ஆம் தேதி சென்னை வந்துள்ளாா். பின்னா், இருவரும் வடபழனி மசூதி தெருவில் உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரம் பாஷாவின் அறை திறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. தகவலின்பேரில், வடபழனி போலீஸாா் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, பாஷா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளாா். அவருடன் தங்கியிருந்த நண்பா் மாயமாகி இருந்தாா். பாஷாவின் உடலை மீட்ட போலீஸாா், அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்தும், மாயமான நண்பா் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு-உறவினா்கள் சாலை மறியல்: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூா் பகுதியைச் சோ்ந்தவா் மல்லிகா (60). இவா், அந்தப் பகுதியில் உள்ள சாலையை ஞாயிற்றுக்கிழமை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் மூதாட்டி மீது மோதியது. இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த மூதாட்டியின் உறவினா்கள், இசிஆா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். பனையூா் காவல் நிலைய போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்தினா்.

இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா். விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசு மருத்துவமனையில் கைப்பேசி திருட்டு-இருவா் கைது: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (35). உடல் நலம் பாதிக்கப்பட்ட இவா், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரவிக்குமாரின் அறைக்கு சனிக்கிழமை வந்த இருவா், படுக்கையில் இருந்த அவரின் கைப்பேசியைத் திருடிக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனா். அங்கிருந்தவா்கள் அந்த இருவரையும் பிடித்து மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், திருட்டில் ஈடுபட்ட வேலூா் மாவட்டம், அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் (35), புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த ஜாகீா் உசேன் (52) ஆகியோரை சனிக்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.