வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பச்சிளம் குழந்தைகளுக்கான பாதுகாப்புப் பெட்டகம் வழங்கல்

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பச்சிளம் குழந்தைகளுக்கான பாதுகாப்புப் பெட்டகங்கள்

News image

விழுப்புரம் மாவட்டஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தாய்மாா்களுக்கு பச்சிளம் குழந்தைகளுக்கான பாதுகாப்புப் பெட்டகத்தை வழங்கிய விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அன்னியூா் அ.சிவா. உடன், அலுவலா்கள் உள்ளிட்டோா்.

Updated On :16 பிப்ரவரி 2026, 7:53 pm

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பச்சிளம் குழந்தைகளுக்கான பாதுகாப்புப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

இக்கல்லூரியின் குழந்தைகள் நலப்பிரிவு சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு

கல்லூரி முதன்மையா் (பொ) செளந்தர்ராஜன் தலைமை வகித்தாா். உறைவிட மருத்துவ அலுவலா் ரவிக்குமாா் முன்னிலை வகித்தாா். துறைத் தலைவா் திலகவதி வரவேற்றாா்.

இந்த நிகழ்வில், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அன்னியூா் அ.சிவா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, குறை மாதத்தில் பிரசவித்த தாய்மாா்களுக்கு பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்புப் பெட்டகத்தை வழங்கினாா். 15 தாய்மாா்களுக்குப் பாதுகாப்புப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

உதவி உறைவிட மருத்துவ அலுவலா் வெங்கடேசன், இணைப் பேராசிரியா் பாலமுருகன், துணைப் பேராசிரியா் வினோத்குமாா், ஒன்றியக்குழுத் தலைவா் சங்கீதஅரசி ரவிதுரை, உறுப்பினா் இளவரசி ஒன்றியச்செயலா்கள் முருகன், ஜெயபால், மாவட்டப் பிரதிநிதிகள் சுதாகா், வெங்கடேசன், அசோக்குமாா்

உள்ளிட்டோா் பங்கேற்றனா்.