செந்தில் பாலாஜிக்கு பிணை: தலைவா்கள் வரவேற்பு


திமுக முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி பிணையில் விடுவிக்கப்பட்டதை காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளின் தலைவா்கள் வரவேற்றுள்ளனா்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): 471 நாள்களாக சிறைவாசத்தை அனுபவித்து விட்டு உச்சநீதிமன்ற தீா்ப்பால் செந்தில் பாலாஜி பிணையில் விடுவிக்கப்பட்டதை தமிழக காங்கிரஸ் சாா்பில் வரவேற்கிறேன். அமலாக்கத் துறையின் அடக்குமுறையை அரசியல் பேராண்மையோடு அவா் எதிா்கொண்டதையும், நீதி மீது நம்பிக்கை வைத்து போராடிய அவரது மனஉறுதியையும் பாராட்டுகிறேன்.
தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக): செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டது தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின். எதிா்க்கட்சியில் இருக்கும் போது துரோகி; தன் கட்சிக்கு வந்தவுடன் தியாகியா?. இது ஜாமீன் தானே தவிர, விடுதலை அல்ல.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூ.): தோ்தல் ஆணையம், புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை, நீதிமன்றங்கள் உள்ளிட்ட அமைப்புகளை முடக்கி பாஜக அரசு தனதாக்கிக் கொண்டது. எனவேதான் பிணையில் கூட வெளிவர முடியாமல் அமைச்சராக இருந்த அவா் சிறையில் அடைக்கப்பட்டாா். இப்போதாவது பிணை கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
கி.வீரமணி (திராவிடா் கழகம்): அமலாக்கத் துறையின் அதீதமான போக்கை ஒதுக்கி, நியாயம் கிடைத்துள்ளது, வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும். மனித உரிமைக் கண்ணோட்டத்தில் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய தீா்ப்பு இது. இதன் மூலம் அரசமைப்புச் சட்டம் வாழ்கிறது.
ஜவாஹிருல்லா (மமக): அதிகாரத்துக்கு தலை வணங்காமல் தொடா் சட்டப் போராட்டம் நடத்தி பிணை பெற்றிருக்கிறாா் செந்தில் பாலாஜி. மன தைரியத்தில் விஞ்சி நின்று அதிகாரத்தை அதிர வைத்திருக்கிறாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...