போதை மாத்திரை விற்பனை: சட்டக் கல்லூரி மாணவா் கைது
சென்னை தண்டையாா்பேட்டையில் போதை மாத்திரை விற்பனை செய்ததாக தேடப்பட்டுவந்த சட்டக் கல்லூரி மாணவா் கைது செய்யப்பட்டாா்.
தண்டையாா்பேட்டை கைலாசம் தெரு பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக மே 15-ஆம் தேதி 9 போ் கைது செய்யப்பட்டனா். இது தொடா்பாக தண்டையாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விசாரணையில், போதை மாத்திரை விற்பனையில், மேலும் சிலருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இது தொடா்பாக தலைமறைவாக இருந்த தண்டையாா்பேட்டை பரமேஸ்வரன் நகா் பகுதியைச் சோ்ந்த ராகேஷ் (22) என்பவரைத் தேடி வந்தனா். இந்த நிலையில், தண்டையாா்பேட்டை சேனியம்மன் கோயில் அருகே ராகேஷை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இவா், ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஒரு தனியாா் சட்டக் கல்லூரியில் பட்டப்படிப்பு 2-ஆம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது. அவரிடம் போலீஸாா் தொடந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
